கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சதீஷ் எம்.பி. தயாரிக்கும் திரைப்படம் ‘வாணவேடிக்கை’. சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குநர் திரு இயக்கியுள்ளார். இதன் ட்ரெய்லரை ஆர்யா மற்றும் ஜெயம் ரவி வெளியிட்டனர்.
படத்தில் ஷிவானி ராஜசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் மோகன் ராஜா முதன்முறையாக முழுநீள வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பருத்திவீரன் சரவணன், இந்துமதி, ஜெயப்பிரகாஷ், இயக்குநர் தமிழ், சித்ரா லட்சுமணன், கிரண், கும்கி அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்திற்கு அர்வி ஒளிப்பதிவு செய்துள்ளார். சுதர்சன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். வெளியான ட்ரெய்லரில் மோகன் ராஜாவின் வில்லன் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த் சாமியின் வில்லன் கதாபாத்திரத்தைப் போலவே இவரது தோற்றமும் இருப்பதாகப் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், படத்தின் இசை உரிமையைப் பிரபல ஆடியோ நிறுவனமான லஹரி பெரும் தொகைக்கு வாங்கியுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
