நுழைவுச்சீட்டு இருந்தும் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு… நடிகர் தனுஷ் வருத்தம்!

தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள ‘ஓம்’ திரைப்படம் நவம்பர் 20-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி, மம்முட்டி, நஸ்ருதீன் ஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. போலீஸ் அனுமதி மற்றும் தீபாவளி தொடர்பான கட்டுப்பாடுகளால், விழாவில் 8,000 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.ஆனால், நுழைவுச்சீட்டு வைத்திருந்த பல ரசிகர்களுக்கும் அரங்கிற்குள் செல்ல அனுமதி கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். .

இதையடுத்து, ரசிகர்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்து தனுஷ் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விழாவில் பங்கேற்க முடியாமல் திரும்பிச் சென்றது வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், யார் மீது தவறு என்பதை ஆராய விரும்பவில்லை என்றும், இதற்குத் தானே பொறுப்பேற்று மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார். இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் பார்த்துக்கொள்வது தனது பொறுப்பு என்றும் உறுதியளித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply