பிரபாஸ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கல்கி 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. பிரபாஸின் பிறந்தநாளான அக்டோபர் 23-ம் தேதியை முன்னிட்டு, படக்குழு அறிவிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் பிரபாஸ் மீண்டும் பைரவா கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கியிருப்பது உறுதியாகியுள்ளது. ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில், வீடியோவில் அவரது நிழல் உருவக் காட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. படத்தின் வெளியீட்டுத் தேதி உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் எதுவும் தற்போது அறிவிக்கப்படவில்லை.
முதல் பாகத்தில் தீபிகா படுகோனே நடித்த சுமதி கதாபாத்திரத்தில் அடுத்ததாக யார் நடிக்கிறார் என்பது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற நடிகர்கள் தங்களது கதாபாத்திரங்களில் மீண்டும் நடிப்பார்கள் எனக் கூறப்படுகிறது. வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் ‘கல்கி 2’ திரைப்படத்தை 2028-ம் ஆண்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
