Advertisement

ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைக்கும் புதுமுகமான வருண் முரளி!

நடிகை ஸ்ருதிஹாசன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் வருண் முரளி இசையமைக்கிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கும் இப்படத்தை, ‘அஸ்வின்ஸ்’ படத்தின் இயக்குநர் தருண் தேஜா எழுதி இயக்குகிறார்.

சென்னையின் சுயாதீன இசை மற்றும் ராப் பாடல்கள் மூலம் கவனம் பெற்ற வருண் முரளி, இப்படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இது தனது முதல் திரைப்படம் என்று அறிமுக வீடியோவில் தெரிவித்துள்ள அவர், ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தேவை எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இப்படத்தின் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ஸ்ருதிஹாசன் நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள ‘ட்ரெயின்’, பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘வேட்டுவம்’ ஆகிய படங்களும் வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன.

Add a Comment

Leave a Reply