Advertisement

அக்டோபர் 15 முதல் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் ‘என்ன விலை’!

மலையாளத்தில் தேசிய விருது பெற்ற ‘தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்’ திரைப்படத்துக்குக் கதை எழுதிய சஜீவ் பழூர், ‘என்ன விலை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். கடந்த செப்டம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து, தற்போது இப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 15-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ‘என்ன விலை’ வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் இப்படத்தைப் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply