‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ திரைப்படம் கிராமி விருதுக்கான பரிசீலனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பி62 ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிறுவனம், படத்துக்கு ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளது.சிறந்த பாடல் வரிகள், ஆசிய அளவிலான பாப், குளோபல் இசை, ராப், பாப் மற்றும் எலக்ட்ரானிக் இசை உள்ளிட்ட பிரிவுகளில் இப்படம் பரிசீலனைக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 9 பிரிவுகளில் கிராமி விருதுக்கான பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
Add a Comment
