பெண்கள் தங்களை குறித்து தயக்கமின்றிப் பேச வேண்டும் – சமந்தா வலியுறுத்தல்!

பெண்களின் உடல்நலம், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மனநலம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு அதிகரித்து வருவதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பெண்கள் உடல்நலம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், பெண்கள் தங்களது உடல்நலப் பிரச்சினைகளை வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமான மாற்றம் என்று குறிப்பிட்டார்.

முந்தைய தலைமுறையினர் மாதவிடாய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளை வெளியில் சொல்லாமல் சகித்துக்கொண்டதாகக் கூறிய சமந்தா, தற்போதைய தலைமுறையினர் அதற்கான தீர்வுகள் மற்றும் ஆரோக்கியமான மாற்று வழிகள் குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார். உடல் ஆரோக்கியம், கருவுறுதல், தூக்கம், மன அழுத்தம் மற்றும் மனநலம் போன்ற விஷயங்களில் பெண்கள் தயக்கமின்றிப் பேசுவது அவசியம் என்றும் வலியுறுத்தினார். நிகழ்ச்சியின்போது தனது உணவுப் பழக்கம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் சாதனையை 42 ஆண்டுகளுக்குப் பிறகு சமன் செய்து, பின்னர் அதை முறியடித்த வித்யா ராம்ராஜும் கலந்துகொண்டார். அவரை நேரில் சந்தித்த சமந்தா, பாராட்டுகளைத் தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading