‘டோரதி’ வெற்றியை இளையராஜாவுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழுவினர்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் வெளியான ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர். கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வெளியாகி இரண்டு வாரங்களைக் கடந்துள்ள நிலையில், கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தின் இசை படத்தின் வெற்றிக்குப் பக்கபலமாக அமைந்த நிலையில், இசைஞானி இளையராஜாவை அவரது ஸ்டுடியோவில் நேரில் சந்தித்த படக்குழுவினர், கேக் வெட்டி படத்தின் வெற்றியைக் கொண்டாடினர்.

இந்த சந்திப்பின் வீடியோவை பகிர்ந்த கார்த்திக் சுப்புராஜ், ‘டோரதி’ படத்தின் வெற்றிக்குக் காரணமான இளையராஜாவுடன் இந்த தருணத்தை கொண்டாடுவதாகக் குறிப்பிட்டு, அவரது இசைக்கும் அர்ப்பணிப்புக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading