மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய ‘திரிஷ்யம்’ திரைப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் பல மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடித்திருந்த நிலையில், முதல் இரண்டு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்றாம் பாகமாக ‘திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ உருவானது.
முந்தைய பாகங்களைப் போலவே விஜய் சல்கோன்கர் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். ஸ்ரேயா சரண், தபு ஆகியோர் தங்களது முந்தைய கதாபாத்திரங்களை தொடர்ந்துள்ளனர். பிரகாஷ் ராஜ், ஜெய்தீப் அஹ்லாவத் ஆகியோர் புதிதாக இணைந்துள்ளனர். குறிப்பாக ஜெய்தீப் அஹ்லாவத்தின் கதாபாத்திரம் கதையில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் வெளியான இப்படத்திற்கு வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 2ம் தேதி வெளியான படம், நான்கு நாட்களில் உலகளவில் ரூ.308 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வசூல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ரூ.500 கோடியை படம் கடக்குமா என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
—
