பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர். சரவணன் நடிப்பில் வெளியான ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் தனது புகைப்படங்கள், வீடியோக்களை ஏஐ தொழில்நுட்பத்தில் மாற்றும் வகையில் வசதி செய்து கொடுத்ததாகக் கூறப்படும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த ஏஐ நிறுவனத்திற்கு எதிராக ஊர்வசி ரவுத்தேலா வழக்கு தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி நஷ்டஈடு கோர அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Add a Comment
