‘ஓஜி ரூட்டு தல’ – கெத்து தினேஷின் 26வது பட அறிவிப்பு!

‘அட்டக்கத்தி’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற தினேஷ், ‘லப்பர் பந்து’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களால் ‘கெத்து தினேஷ்’ என அழைக்கப்பட்டார். தற்போது பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படத்திலும் நடித்துள்ள அவர், தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அறிமுக இயக்குநர் மதி ஆனந்த் இயக்கும் இந்த புதிய படத்தை வி6 ஃபிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் வேலாயுதம் தயாரிக்கிறார். தினேஷின் 26வது படமாக உருவாகும் இப்படத்திற்கு ‘ஓஜி ரூட்டு தல’ என்ற அடைமொழியுடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படத்தில் கயல் ஆனந்தி, லிங்கேஷ், சுபா வரதராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செப்டம்பர் 28-ம் தேதி காலை 10.10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.இதனிடையே, பா. இரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடித்துள்ள ‘வேட்டுவம்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இதனால் அடுத்தடுத்து வெளியாகும் தினேஷின் புதிய படங்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading