‘குறிஞ்சி’ தொடரில் அனுஷா ஹெக்டே!

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அனுஷா ஹெக்டே. தமிழில் ஒளிபரப்பான ‘ஆனந்த ராகம்’ தொடரின் மூலம் தனக்கென ரசிகர்களை பெற்ற இவர், தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘குறிஞ்சி’ என பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடரில் அனுஷா ஹெக்டே, அகிலா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வரும் செப்டம்பர் 28ம் தேதி முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

Add a Comment

Leave a Reply