நானியின் ‘தி பாரடைஸ்’ படத்துக்கு ‘A’ சான்றிதழ்!

ரசிகர்களுக்கு டிரெய்லர் வெளியிடாமல் ‘தி பாரடைஸ்’ படத்தை நேரடியாக திரையரங்கில் கொண்டு வர நானி முடிவு செய்துள்ளார். இதற்கான காரணமாக படத்தின் இறுதிக்கட்ட பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையே அவர் தெரிவித்துள்ளார். தற்போது படத்தின் தணிக்கை விவரமும் வெளியாகியுள்ளது.

ஒரு டிரெய்லரை உருவாக்குவதற்கே 4 முதல் 5 நாட்கள் தேவைப்படும் என்பதால், அந்த காலத்தை போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்காக செலவிட விரும்புவதாக நானி கூறியுள்ளார். படத்தின் இறுதி வடிவத்தை சிறப்பாக கொண்டு வருவதிலும், ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படைப்பை வழங்குவதிலும் முழு கவனம் செலுத்தப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு வெளியான ‘தசரா’ திரைப்படத்தின் மூலம் நானி – ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த கூட்டணி ‘தி பாரடைஸ்’ படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது. எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தில் நானி இதுவரை ஏற்றிராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. வரும் 24ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், டிரெய்லர் இல்லாத வெளியீடு மற்றும் ‘ஏ’ சான்றிதழ் ஆகியவை படத்தின் மீதான கவனத்தை அதிகரித்துள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading