மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, மகிமா நம்பியார், சுகாஸ், பால சரவணன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த ‘மண்டாடி’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் உருவான இப்படம், அவர்களுக்கிடையே நடைபெறும் பாய்மரப் படகு போட்டியை கதையின் முக்கிய அம்சமாக கொண்டிருந்தது. வெளியானது முதலே படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததுடன், வசூலும் தொடர்ந்து அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘மண்டாடி’ திரைப்படம் தற்போது ரூ.100 கோடி வசூல் என்ற மைல்கல்லை எட்டியுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் சூரியின் திரைப்பயணத்தில் ரூ.100 கோடி வசூலை கடந்த முதல் படமாக ‘மண்டாடி’ அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
