2வது நாயகியிலிருந்து ஹீரோயின்.. ஐஸ்வர்யா சர்மாவின் அடுத்த படி ‘ராவடி’!

‘டியூட்’ படத்தில் இரண்டாவது நாயகியாக அறிமுகமான ஐஸ்வர்யா சர்மா, தற்போது தனது அடுத்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். விளம்பரப் படங்களிலும் சில இந்திப் படங்களில் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள அவர், ‘ராவடி’ மூலம் கதையின் முக்கிய நாயகியாக முன்னேறியுள்ளார்.

விக்னேஷ் வடிவேலு இயக்கும் இப்படம் இன்றைய இளைஞர்களை மையமாகக் கொண்ட காமெடி என்டர்டெய்ன்மென்ட் படமாக உருவாகி வருகிறது. இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ற திரைக்கதை, கலகலப்பான சம்பவங்கள் மற்றும் நகைச்சுவை தருணங்கள் ஆகியவற்றை இணைத்து முழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பசில் ஜோசப், எல்.கே. அக்ஷய் குமார், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன், ஷாரீக் ஹாஸன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்கும் ‘ராவடி’, தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. வரும் டிசம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படம், ஐஸ்வர்யா சர்மாவின் கதாநாயகி பயணத்தில் அடுத்த முக்கிய படியாக அமைய உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading