பிரபாஸின் ‘பௌசி’ ரிலீஸ் தள்ளி போவதை உறுதிப்படுத்திய தயாரிப்பாளர்!

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘பௌசி’ திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் ரவிசங்கர் வெளியிட்டுள்ள தகவல் தற்போது கவனம் பெற்றுள்ளது. பிரம்மாண்டமான படமாக உருவாகி வரும் இப்படத்தின் பணிகளில் ஏற்பட்ட சிறிய தாமதம் காரணமாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வெளியீட்டு தேதியை மாற்ற முடிவு செய்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ஹனு ராகவுப்புடி இயக்குகிறார். இமான்வி கதாநாயகியாக நடிக்க, அனுபம் கேர், மிதுன் சக்கரவர்த்தி, பானுசந்தர், ஜெயப்பிரதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் வரும் டிசம்பர் 3ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

நானி நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ படத்தின் விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ரவிசங்கர், ‘பௌசி’ படத்தின் வெளியீடு தள்ளிப்போவதை உறுதி செய்தார். தயாரிப்புப் பணிகள் எதிர்பார்த்ததைவிட சற்று தாமதமாகி வருவதால் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், “பாகுபலி படத்திற்குப் பிறகு பிரபாஸை இப்படியான ஒரு தோற்றத்தில் பார்த்திருக்க மாட்டீர்கள்” என்றும், படம் மிகப்பெரிய அளவில் உருவாகி வருவதாகவும் கூறினார்.படம் வேற லெவல் சினிமா அனுபவத்தை வழங்கும் என்றும், ரசிகர்கள் வாழ்நாள் முழுவதும் கொண்டாடும் படமாக இது இருக்கும் என்றும் ரவிசங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனினும், புதிய வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading