தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் இணையும் சாய் அபயங்கர்!

தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்துள்ள ‘ஓம்’ திரைப்படம் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்தப் புதிய படம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு பிரச்னை நிலுவையில் இருப்பதாக கூறப்பட்டாலும், படத்திற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இசையமைப்பாளர் சாய் அபயங்கர், தமிழரசன் பச்சமுத்துவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, “கேக்குறாங்க சொல்லுங்க பிரதர்” என பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த தமிழரசன் பச்சமுத்து, “‘பொட்டு வச்ச தங்கக்குடம்’ பாடலுக்கு அன்ஃப்ளக்டு வெர்ஷன் பண்ணித் தா… நீதான்னு சொல்லிடறேன்” என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

இருவரின் இந்த உரையாடல் மூலம் தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே தனுஷ் நடிப்பில் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகும் ‘ஓம்’ படத்திற்கும் சாய் அபயங்கர்தான் இசையமைத்துள்ளார்.இதன்மூலம் ‘ஓம்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் தனுஷ் மற்றும் சாய் அபயங்கர் இணையும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திலும் இந்தக் கூட்டணி தொடர இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading