மாஸ் ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியான ஜேசன் சஞ்சயயின் ‘சிக்மா’ டிரெய்லர்…!

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ படத்தின் மூலம் இயக்குநராக திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். தமன் இசையமைக்கும் இப்படத்தில் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரைப்படத் தயாரிப்பு தொடர்பான படிப்பை கனடாவின் டொராண்டோ பிலிம் ஸ்கூலில் முடித்துள்ள ஜேசன் சஞ்சய், பின்னர் லண்டனில் திரைக்கதை எழுதுதல் தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படிப்பையும் படித்துள்ளார். இதற்கு முன்பு சில குறும்படங்களையும் இயக்கியுள்ள நிலையில், தற்போது முழுநீள திரைப்படத்தின் மூலம் தனது இயக்குநர் பயணத்தை தொடங்கியுள்ளார்.

‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே, சென்னையில் நடைபெற்ற ‘சிக்மா’ படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து, படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. சந்தீப் கிஷன் இடம்பெறும் அதிரடியான காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த டிரெய்லர், தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading