‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘மைக்கேல்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி, அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் பூஜையுடன் நடைபெற்றது. கே.எஸ்.ரவிகுமார், சரவணன், யோகி பாபு, பாலா சரவணன், அஷ்வினி நம்பியார், மோனா பெட்ரே, ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ப்ரீத்தி பகதாலா இப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே தெலுங்கில் ‘பதங்’, ‘418’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
வசந்த் விஜய் எம்.பி., சண்முக பிரியன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பர்வீன் பானு இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாகும் இந்த திரைப்படம், காதல், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களை இணைத்த ஃபேமிலி ரொமான்ஸ் டிராமாவாக உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
