என் அம்மா அப்பாவுக்கு நன்றி… ‘சிக்மா’ படத்திற்கு ஆதரவு கொடுங்கள்…ஜேசன் சஞ்சய் டாக்!

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சென்னையில் நடைபெற்ற ‘சிக்மா’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜேசன் சஞ்சய், படத்தின் தலைப்புக்கான தனது பார்வையை பகிர்ந்துள்ளார். வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தேவை அல்லது பிரச்சனை இருக்கும் என்றும், அந்த சூழலில் அவர்கள் எடுக்கும் ஒரு முடிவு ஒட்டுமொத்த வாழ்க்கையையே மாற்றக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டதே ‘சிக்மா’ என அவர் கூறியுள்ளார்.

இது தனது முதல் படம் என்பதால் மிகவும் சிறப்பானதும் மறக்க முடியாததுமாக இருப்பதாக தெரிவித்த ஜேசன் சஞ்சய், இந்தப் பயணத்தில் தன்னுடன் இணைந்து பணியாற்றிய அனைவரும் படத்தை தனக்கு மேலும் நினைவுகூரத்தக்க அனுபவமாக மாற்றியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து தனது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்த அவர், தனது தாய், தந்தை, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை நினைவுகூர்ந்தார். தற்போது தமிழக முதல்வராக இருக்கும் தனது தந்தை விஜய்க்கும் நன்றி தெரிவித்ததுடன், தனது தங்கை திவ்யாவுக்கும் நன்றி கூறினார். இறுதியாக, ‘சிக்மா’ அக்டோபர் 2-ம் தேதி வெளியாக இருப்பதால் அனைவரும் படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading