மதிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். எல்ரட் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், வெளியான 8 நாட்களில் உலகளவில் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சூரியின் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த படமாக ‘மண்டாடி’ அமையக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
Add a Comment
