“எனக்காக மட்டுமே வாழ்கிறேன்” – மனம் திறந்த‌ ஜாக்குலின் பெர்னாண்டஸ்!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜாக்குலின் பெர்னாண்டஸ், கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தார். குறிப்பாக மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகருடன் அவருக்கு இருந்த தொடர்பு குறித்து விசாரணை நடைபெற்றது. அந்த சமயத்தில், சுகேஷ் சந்திரசேகர் ஜாக்குலினுக்கு பணம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளை வழங்கியதாக விசாரணை தகவல்கள் வெளியாகின.

இந்த விவகாரம் தொடர்பான பரபரப்பு தற்போது ஓரளவு தணிந்துள்ள நிலையில், ஜாக்குலின் மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிய தனிப்பட்ட கருத்துகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

சமீப காலமாக எந்த விஷயத்திலும் தனது கருத்தை வெளிப்படையாக தெரிவிப்பதை குறைத்துவிட்டதாக ஜாக்குலின் கூறியுள்ளார். சில நேரங்களில் அமைதியாக இருப்பதே மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றாலும், தான் செல்ல வேண்டிய பாதை குறித்து தெளிவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். யாருக்கும் உதவி செய்யவோ, ஆறுதல் அளிக்கவோ தான் வரவில்லை என்றும், இது தனது வாழ்க்கை என்பதால் தன்னுடைய விருப்பப்படியே வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தற்போது தனது வாழ்க்கையை தனக்காக மட்டுமே வாழ்ந்து வருவதாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

—

Add a Comment

Leave a Reply