இளையராஜா இசையமைப்பில் மராத்தி மொழியில் உருவான ‘கோந்தல்’ திரைப்படம், 2027ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் சந்தோஷ் திவாகர் இயக்கிய இப்படத்தில் இஷிதா தேஷ்முக் ‘சுமன்’ என்ற கதாபாத்திரத்தில் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். கிஷோர் கதம், யோகேஷ் சொஹோனி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பாரம்பரிய ‘கோந்தல்’ வழிபாட்டு நடனக் கலையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
Add a Comment
