‘பத்தா’ படத்தில் இருந்து வெளியான World of Baththa வீடியோ!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்தா’ படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகியுள்ளது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி தரணீதரன் இப்படத்தை இயக்கியுள்ளார். லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் அட்லி தயாரித்துள்ளார்.

1980-களின் பின்னணியில் கதை நகரும் வகையில் உருவாகியுள்ள ‘பத்தா’ படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தின் போஸ்டர் வெளியானபோதே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவான நிலையில், அதன்பிறகு வெளியான ‘மகளே’ பாடலும் கவனத்தை ஈர்த்தது.

இதற்கிடையே படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களின் பார்வையை பெற்றுள்ளது. குறிப்பாக விஜய் சேதுபதியின் தோற்றமும், அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பின்னணியை அறிந்து கொள்ளும் ஆர்வத்தையும் டீசர் ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், படக்குழு World of Baththa என்ற வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது ‌

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading