சினிமாவைத் தாண்டி கார் பந்தயத்திலும் தனது ஆர்வத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் அஜித்குமாரின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தைப் பதிவு செய்யும் வகையில் ‘Gladiators in Pursuit of Challenges’ என்ற ஆவணப்படம் உருவாகியுள்ளது. ஏ.எல். விஜய் இயக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க, அஜித்தின் மனைவி ஷாலினி தயாரித்துள்ளார்.
ஆவணப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. நவம்பர் மாதம் படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தற்போது இதில் இடம்பெறவுள்ள முக்கியமான காட்சிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் பங்கேற்ற சில்வர்ஸ்டோன் மிச்செலின் லீ மான்ஸ் கார் பந்தயத்தை லண்டனில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். போட்டி முடிந்த பிறகு அஜித்துடன் இணைந்து விஜய் ரேஸ் காரில் பயணம் செய்த காட்சிகளும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றன. தற்போது இந்த சந்திப்பு தொடர்பான காட்சிகளையும் ஆவணப்படத்தில் இணைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
—
