நவம்பர் 2 முதல் அஜித்தின் ‘டேர் டெவில்’ படப்பிடிப்பு… வெளியான அறிவிப்பு!

அஜித்தின் அடுத்த படமாக உருவாகும் ‘டேர் டெவில்’ குறித்த முக்கிய தகவலை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது பகிர்ந்துள்ளார். நீண்ட நாட்களாக படத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கும் தேதி மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்தக் காத்திருப்புக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. ‘டேர் டெவில்’ படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 2-ம் தேதி தொடங்கும் என ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தனக்கு அஜித்குமார் வழங்கிய பிறந்தநாள் பரிசு என்றும் இயக்குநர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு அஜித் – ஆதிக் கூட்டணி மீண்டும் இணையும் இப்படம், அஜித்தின் 64-வது திரைப்படமாக உருவாகிறது. ஷாலினி அஜித்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மோகன்லால் மற்றும் வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், படப்பிடிப்பு தொடங்கும் தேதி தற்போது உறுதியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading