செப்.18ல் அமேசான் பிரைமில் வெளியாகும் ‘ராம் அண்ட் லீலா’!

அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் ரியோ மற்றும் வர்திகா நடிப்பில் உருவான திரைப்படம் ‘ராம் அண்ட் லீலா’. முனிஷ்காந்த், மாகாபா ஆனந்த், மாளவிகா அவினாஷ், சேத்தன், தீபா வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு அங்கித் மேனன் இசையமைத்துள்ளார். நகைச்சுவை, ஃபேன்டஸி கலந்த காதல் படமாக உருவான இது, கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், செப்டம்பர் 18ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் படம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading