ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’. ஜி.வி.பிரகாஷ், ஆனந்த், மனிஷா யாதவ் நடிப்பில் உருவான இப்படத்தில் ஆர்யா மற்றும் சிம்ரன் கவுரவ தோற்றத்தில் நடித்திருந்தனர். அடல்ட் காமெடி கதைக்களத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இப்படம் வரும் அக்டோபர் 24ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Add a Comment
