கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’ – இளையராஜாவின் பின்னணி இசைக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு!

இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள ‘டோரதி’ படத்தின் பின்னணி இசை ஆல்பம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இப்படம் செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கார்த்திக் சுப்பராஜின் திரைப்பயணத்தில் இது 10-வது திரைப்படம். இதற்கு முன்பு அவர் இயக்கிய ஒன்பது படங்களில் ‘பேட்ட’ படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். எஞ்சிய படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இருப்பினும், கார்த்திக்கின் பல படங்களில் முக்கியமான காட்சிகளில் இளையராஜாவின் பழைய பாடல்கள் அல்லது பின்னணி இசை இடம்பெற்றிருப்பதை ரசிகர்கள் கவனித்திருக்கிறார்கள்.

அந்த வகையில், முதல்முறையாக தனது முழு படத்திற்கும் இளையராஜாவை இசையமைப்பாளராக கார்த்திக் சுப்பராஜ் தேர்வு செய்துள்ளார். இந்த கூட்டணி ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள ‘டோரதி’யின் OST அந்த எதிர்பார்ப்புக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading