லீ க்ரோனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீ க்ரோனின்ஸ் த மம்மி’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திகில் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ‘லீ க்ரோனின்ஸ் த மம்மி’ திரைப்படத்தை வரும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகும் இப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Add a Comment
