8 நாட்களில் 341 கி.மீ சைக்கிள் பயணம்… அசத்திய ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

தமிழ் ரசிகர்களிடையே ‘விக்ரம் வேதா’, ‘இவன் தந்திரன்’, ‘இறுகப்பற்று’ உள்ளிட்ட திரைப்படங்களில் தனது நடிப்பால் கவனம் பெற்ற ஷ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது ரவி மோகன் நடிக்கும் ‘ப்ரோ கிளப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். திரைப்பணிகளுக்கு இடையே பயணங்களிலும் ஆர்வம் காட்டி வரும் அவர், சமீபத்தில் மேற்கொண்ட சாகசப் பயணம் குறித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானுக்கு சென்ற ஷ்ரத்தா ஸ்ரீநாத், அங்கு வழக்கமான சுற்றுலாவைத் தேர்வு செய்யாமல் சைக்கிள் மூலம் நீண்ட தூரப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். மலைப்பகுதிகள், பள்ளத்தாக்குகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை கடந்து, மொத்தம் 341 கிலோமீட்டர் தூரத்தை எட்டு நாட்களில் அவர் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இந்த சவாலான அனுபவத்தை நிறைவு செய்த தருணம் தன்னை பெருமையிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியதாக ஷ்ரத்தா தெரிவித்துள்ளார். பயணம் முடிந்தபோது ஆனந்தக் கண்ணீர் வந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், கிர்கிஸ்தானின் இயற்கை அழகு தன்னை வெகுவாக கவர்ந்ததாகவும் கூறியுள்ளார். குறிப்பாக மலைப் பாதைகள், சரளைக் கற்கள் நிறைந்த சாலைகள் மற்றும் நீரோடைகளை கடந்து சென்ற அனுபவம் கனவு போன்றதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading