‘டிசி’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது சித்தார்த்தா?

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள ‘டிசி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. வெளியான சில நாட்களிலேயே இப்படம் சுமார் ரூ.100 கோடி வசூலை குவித்த நிலையில், படத்தின் உருவாக்கம் குறித்த சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

‘டிசி’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் முகேஷ் ஜி அளித்த பேட்டியில், இப்படத்தின் ஆரம்பக்கட்ட உருவாக்கம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியதாக தெரிவித்துள்ளார். அப்போது படத்தின் கதாநாயகனாக நடிக்க பல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், இறுதியாக சித்தார்த் தேர்வு செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட கதை தற்போது வெளியாகியுள்ள படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்ததாம். அப்போது ஒரு கேங்ஸ்டரை மையமாகக் கொண்ட கதையாக ‘டிசி’ உருவாக்க திட்டமிடப்பட்டிருந்ததாக முகேஷ் ஜி தெரிவித்துள்ளார். சித்தார்த்தை வைத்து படத்தை தொடங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்ற போதிலும், அதிகாரப்பூர்வமாக படப்பிடிப்பை தொடங்குவதில் ஏற்பட்ட நீண்ட கால தாமதம் காரணமாக அந்த முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.அதன்பிறகு படக்குழுவில் இருந்த பலரும் வெவ்வேறு திரைப்படப் பணிகளுக்குச் சென்றுவிட்டதால், அந்தக் கட்டத்தில் ‘டிசி’ திட்டம் கிடப்பில் போடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்படம் புதிய வடிவம் பெற்று லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading