‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் சிம்பு, வெற்றிமாறனுடன் அனிருத்… வைரலாகும் புகைப்படம்!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வடசென்னை களத்தை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் கதையில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரக்கனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு எதிர்பாராதவிதமாக இடைநிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் சுமூகமாக முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. தீபாவளியை முன்னிட்டு படத்தை வெளியிடும் நோக்கில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில், இசையமைப்பாளர் அனிருத் ‘அரசன்’ படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்றுள்ளார். அங்கு வெற்றிமாறன், சிம்பு மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஆகியோருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அனிருத்தின் வருகையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading