‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு முடிந்தது… முக்கியமான அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ரஜினிகாந்த் தனது அடுத்த படமான ‘தர்மன்’ பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ‘ஜெயிலர் 2’ மற்றும் ‘தர்மன்’ படங்கள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டதாகவும், ‘தர்மன்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டு தற்போது சென்னை வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், ‘தர்மன்’ படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதாகவும், ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் இருவரும் இணைந்து நடிப்பதாகவும் ரஜினிகாந்த் கூறினார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் விஜய்யின் 100 நாள் ஆட்சி எப்படி உள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அரசியல் தொடர்பான அந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல் ‘நன்றி’ என்று மட்டும் கூறிய ரஜினிகாந்த், அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading