ரஜினியுடன் மீண்டும் இணையும் ஷ்ரேயா… ‘தர்மன்’ படத்தில் என்ன ஸ்பெஷல்?

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் தலைவர் 173 திரைப்படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘படையப்பா’, ‘வேட்டையாடு விளையாடு’ ஆகிய படங்களின் கலவையாக இப்படம் இருக்கும் என அஷ்வத் மாரிமுத்து ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி இப்படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், நடிகை ஷ்ரேயா ரஜினிகாந்துடன் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘மகிழ்ச்சியான நாள்’ எனப் பதிவிட்டுள்ளார். இதனால், படத்தில் இடம்பெறும் சிறப்பு நடனத்தில் ரஜினியுடன் ஷ்ரேயா இணைந்து நடனமாடவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ‘சிவாஜி’ படத்தின் ‘வாஜி வாஜி’ பாடலில் இருவரின் நடனமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், ராஷி கன்னா ஆகியோரும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சகோதரர்கள் சண்டைப் பயிற்சியை மேற்கொள்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading