ரஜினிகாந்தின் சுயசரிதை… சவுந்தர்யா சொன்ன சுவாரஸ்ய தகவல்!

‘ஜெயிலர் 2’ படத்தை முடித்துள்ள ரஜினிகாந்த், தற்போது அஷ்வத் மாரிமுத்து இயக்கும் ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். சிம்ரன், ராஷி கன்னா உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில், ரஜினிகாந்த் தனது வாழ்க்கையை சுயசரிதையாக எழுதி வருவதாக அவரது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “அப்பா தனது சுயசரிதையை எழுதி வருகிறார். அந்தப் பணியில் நானும் நெருக்கமாக ஈடுபட்டுள்ளேன். அந்தப் புத்தகம் வெளியாகும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். மக்கள் மீண்டும் மீண்டும் வாசித்து உத்வேகம் பெறக்கூடிய அரிய படைப்பாக அது இருக்கும் என நம்புகிறேன். பரமஹம்ச யோகானந்தரின் ‘ஆட்டோபயோகிராபி ஆஃப் எ யோகி’ புத்தகத்தைப் போன்ற முக்கியத்துவத்தை அப்பாவின் சுயசரிதையும் பெறும் என நம்புகிறேன். அவரது வாழ்க்கைப் பயணம் மிகவும் தனித்துவமானது. சரியான நேரம் வரும்போது, அவரது வாழ்க்கைக் கதை திரைப்படமாக உருவானால், தனிப்பட்ட முறையிலும் தொழில்ரீதியாகவும் நான் மேற்கொள்ளக்கூடிய சிறப்பான படமாக அது இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

பேருந்து நடத்துநராக வாழ்க்கையைத் தொடங்கிய ரஜினிகாந்த், திரையுலகில் ஆரம்ப காலத்தில் எதிர்கொண்ட போராட்டங்கள், படிப்படியாக அடைந்த வளர்ச்சி, முக்கியமான திரைப்படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடனான நெருக்கம் உள்ளிட்ட பல்வேறு அனுபவங்கள் அவரது சுயசரிதையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வாழ்க்கையின் பல்வேறு முக்கியமான கட்டங்களை பதிவு செய்யும் இந்தப் புத்தகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading