இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான ‘துரந்தர்’ முதல் ‘தாய் கிழவி’ வரை !

இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 57-வது பதிப்பு, வரும் நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை கோவாவில் நடைபெற உள்ளது. ‘எல்லைகளைக் கடந்த கதைகள்’ என்ற மையக்கருத்துடன் இந்த விழா நடைபெறுகிறது. செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 86 நாடுகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 150-க்கும் அதிகமான சர்வதேசத் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தியத் திரைப்படங்களுக்கான பிரிவில் 18 மொழிகளைச் சேர்ந்த 76 படங்கள் இடம்பெறுகின்றன.

இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்படும் படங்களின் வரிசையில், தொடக்கத் திரைப்படமாக ‘துரந்தர்’ இடம்பெறுகிறது. நிறைவுத் திரைப்படமாக ‘பிகம்மிங்’ திரையிடப்பட உள்ளது. நிவின் பாலி நடித்துள்ள ‘சர்வம் மாயா’ திரைப்படமும் இந்தப் பிரிவுக்குத் தேர்வாகியுள்ளது. அதேபோல், பிரிக்ஸ் சினிமா பிரிவின் தொடக்கத் திரைப்படமாக ‘ராமாயணா’ திரையிடப்படும் என விழா அறிவித்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் தமிழ்த் திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், சத்யசிவா இயக்கத்தில் உறியடி விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘அறிவு’ திரைப்படமும் இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ளது. டிசம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள இப்படம், அதன் வெளியீட்டுக்கு முன்பே சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்குத் தேர்வாகியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

Add a Comment

Leave a Reply