தமிழ் இசை உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் வகையில், ‘ரகிட என்டர்டெயின்மென்ட்’ சார்பில் மன்னர் முத்து மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் முதல் இசை வெளியீடாக ‘மன்னாரு’ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் ஆகஸ்ட் 8 முதல் அனைத்து முக்கிய இசை தளங்களிலும் கிடைக்கிறது. மன்னர் முத்து தனது தனித்துவமான குரலில் பாடியுள்ள இந்தப் பாடலை கென் ராய்சன் இயக்கியுள்ளார். கே. காட்டியன் மற்றும் கானா பிரான்சிஸ் பாடல்வரிகளை எழுதியுள்ளனர். விறுவிறுப்பான காட்சிகளும் உற்சாகமான இசையும் இணைந்துள்ள ‘மன்னாரு’ பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Add a Comment
