Advertisement

ஐமேக்ஸ் வடிவில் வெளியாகும் ‘டாக்சிக்’ – யஷின் புதிய சாதனை!

யஷ் நடித்துள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி உலகளவில் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படம் ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே யஷ் நடித்த ‘கேஜிஎப்’ திரைப்படம் ஐமேக்ஸில் வெளியான நிலையில், அதனைத் தொடர்ந்து ஐமேக்ஸ் வடிவில் வெளியாகும் இரண்டாவது கன்னட திரைப்படமாக ‘டாக்சிக்’ அமைந்துள்ளது. மேலும், தனது இரண்டு திரைப்படங்களையும் இந்த உயர்தர ஐமேக்ஸ் வடிவில் வெளியிடும் ஒரே கன்னட நடிகர் என்ற பெருமையையும் யஷ் பெறுகிறார்.

Add a Comment

Leave a Reply