அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமான ‘டிசி’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்தில் சஞ்சனா மற்றும் வாமிகா கபி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ஏ’ சான்றிதழ் பெற்ற திரைப்படமாக இருந்தாலும், இளம் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அனிருத் அமைத்துள்ள பின்னணி இசை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
Add a Comment
