நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தை மூத்த இயக்குநர் சசி இயக்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படம், திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஸ்வாசிகா, அஜய் திக்ஷன், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இப்படம் ஜீ5 OTT தளத்தில் வெளியாகியுள்ளது.
Add a Comment
