“மகுடம்” வெற்றி பெற்ற பிறகு நிறைய விஷயங்கள் பேசுவேன்… உணர்ச்சிபூர்வமாக பேசிய விஷால்!

நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் “மகுடம்”. அவர் நடித்து இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் விஷால் பல உணர்ச்சிபூர்வமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். பேச்சை தொடங்கிய அவர், “இது சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 99-வது படம். என்னை 45-வது இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார்கள். இந்த தருணத்தில் என் குருநாதர் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனுக்கு நன்றி” என்றார். தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி தன்னுடைய கடினமான தனிப்பட்ட காலகட்டத்தில் தன்னுடன் இருந்து ஊக்கமளித்ததாகவும் குறிப்பிட்டார்.

அதன்பிறகு, “என் கஷ்டங்களில் என்னை பாசிட்டிவாக நிற்க வைத்த என் வருங்கால மனைவி சாய் தன்ஷிகாவிற்கும் நன்றி. வேறு யாராவது இருந்திருந்தால் இந்த நேரத்தில் பிச்சுக்கிட்டு ஓடிருப்பாங்க” என்று கூறியதும் அரங்கில் கைதட்டல் எழுந்தது. ஜான் விஜயை பற்றி நகைச்சுவையாக பேசிய விஷால், கல்லூரி நாட்களில் அவர் காட்டிய ஆட்டிடியூட்டை நினைவுகூர்ந்து, “அதே ஆட்டிடியூட்டை இந்தப் படத்தில் பயன்படுத்தினேன்” என்றார். மேலும், இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்து, “அவரின் ரசிகனாக இந்தப் படத்தில் ஒரு சிறிய விஷயத்தை செய்திருக்கிறேன்” என்றும் கூறினார்.

“எந்த பிரச்சனை வந்தாலும் சிரிச்சுக்கிட்டே இருங்க; டென்ஷன் ஆகாதீங்க. வெற்றிக்கான பாதையில் வரும் தடைகளை தள்ளிக்கொண்டு போகணும்” என்று இளைஞர்களுக்கு அறிவுரை கூறிய அவர், ஆகஸ்ட் 14-ம் தேதி படம் வெளியாகும் என்றும், “படம் வெற்றி பெற்ற பிறகு ஆகஸ்ட் 16-க்கு பின் நிறைய விஷயங்கள் பேசுவேன்” என்றும் தெரிவித்தார்.

கிளைமாக்ஸ் பற்றி பேசிய விஷால், “வழக்கம்போல விஷால் வந்து அடித்து ரிவெஞ்ச் எடுப்பது மாதிரி இருக்காது. எந்த தமிழ் படத்திலும் பார்க்காத ஒரு கிளைமாக்ஸ் இருக்கும்” என்றார். நடிகர் விஜயை தனது விருப்பமான நடிகர் என குறிப்பிட்ட அவர், “ரோகிணி தியேட்டரில் விஜய் படத்திற்கு கைதட்டிய ரசிகர்கள், என் படத்திற்கும் எப்படி கைதட்டப் போகிறார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்று கூறினார்.

ஜி.வி. பிரகாஷ் இந்தப் படத்தின் மிகப்பெரிய தூண் என்று பாராட்டிய விஷால், ராம் கோபால் வர்மாவின் “உதயம்”, “சிவா” படங்களை பார்த்துதான் இயக்குநராக வேண்டும் என்ற கனவு வந்ததாகவும், 35 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கனவு நனவாகியுள்ளதாகவும் உணர்ச்சிபூர்வமாக பேசினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading