முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு, இன்று செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் முக்கிய திருப்பத்தை எட்டியது. 1999-ல் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

விஜய் தீவிர அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த காலத்தில், சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியதாக கூறப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஜூன் 15-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பும் ஆன்லைன் விசாரணைக்கு அனுமதி கோரினர். ஆனால் நீதிமன்றம் வழக்கை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இன்று வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருவதால் வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதே சமயம், சங்கீதா தரப்பில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம் முதலில் பிற்பகலுக்கு ஒத்திவைத்தது. பின்னர் மதியம் 1 மணிக்கு வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த விவாகரத்து மனு வாபஸ் பெறப்பட்டது. இதன் அடிப்படையில், இந்த வழக்கு முடிவுக்கு வந்ததாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading