தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் ‘பிகில்’ படத்தின் வசூல் விவாதத்திற்கு தற்போது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சிஇஓ அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் அளித்துள்ளார். சமீபத்திய பேட்டியில் அவர் பகிர்ந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.
‘பிகில்’ படம் ஏஜிஎஸ் நிறுவனம் இதுவரை தயாரித்த மிகப்பெரிய செலவுடைய திரைப்படம் என்றாலும், அதே படம் நிறுவனத்திற்கு அதிக லாபம் ஈட்டித் தந்ததாகவும் அவர் கூறினார். படம் நஷ்டத்தை சந்தித்ததாக பரவி வரும் தகவல்கள் உண்மையல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.விஜய்யுடன் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்த அர்ச்சனா, படத்தின் தயாரிப்பு பணிகளில் தானும் பங்கேற்க வேண்டும் என்று நடிகர் விஜய் விரும்பியதாக தெரிவித்தார். பெரிய பட்ஜெட் திரைப்படத்தை கவனமாக நிர்வகிக்க வேண்டும் என்பதால், தன்னை அட்லீயிடம் அறிமுகப்படுத்தி பணிகளில் ஈடுபடச் செய்ததாக கூறினார்.
மேலும், ‘பிகில்’ படத்திற்கு முன்பு எந்த திரைப்படத்திலும் தனது பெயர் டைட்டிலில் இடம்பெறவில்லை என்றும், இந்தப் படத்தில் செய்த பங்களிப்புக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற காரணத்தினால் முதல்வர் விஜய் அவர்களின் அறிவுரைப்படி இந்த படத்தில் தனது பெயர் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக சேர்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.இயக்குநர் அட்லீயின் பிரம்மாண்ட காட்சிக் கற்பனை மீது முழு நம்பிக்கை இருந்ததால் அதிக பட்ஜெட்டில் படம் தயாரிக்கப்பட்டதாக அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
