இயக்குநர்களுக்காக மட்டும் திரையிடப்பட்ட ‘டிசி’ சிறப்புக் காட்சி!

லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நாயகனாக நடித்துள்ள ‘டிசி’ திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 7) திரையரங்குகளில் வெளியானது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிவிப்பு வெளியானதிலிருந்தே இந்தப் படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. வெளியீட்டுக்கு முன்பாக, தமிழ்த் திரைப்பட இயக்குநர்களுக்காக மட்டும் ஒரு சிறப்பு திரையிடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சிறப்புக் காட்சியில் நெல்சன், கே.எஸ். ரவிக்குமார், சுந்தர் சி, பா. ரஞ்சித், ஹெச். வினோத், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி, பார்த்திபன், ஆதிக் ரவிச்சந்திரன், ராஜ்குமார் பெரியசாமி, மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சேரன், ஆர்.ஜே. பாலாஜி, ஆர்.கே. செல்வமணி, சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்கள் பங்கேற்றனர்.ஒரு நடிகராக அல்ல, இயக்குநராக இந்திய அளவில் தனக்கென அடையாளம் உருவாக்கிய லோகேஷ் கனகராஜின் புதிய முயற்சி என்பதால், ‘டிசி’ திரைப்படம் திரையுலகினரிடமும் ரசிகர்களிடமும் தனி எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading