‘ராமாயணா’ நவம்பர் 6 ரிலீஸ் – வெளியான ரிலீஸ் அப்டேட்!

இந்தியாவின் மிகப்பெரிய புராணத் திரைப்படங்களில் ஒன்றாக உருவாகி வரும் ‘ராமாயணா’ படம் குறித்து புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கும் இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், யாஷ் மற்றும் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நமித் மல்ஹோத்ரா தயாரிக்கும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. முதல் பாகம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என முன்பு கூறப்பட்ட நிலையில், தற்போது நவம்பர் 6-ம் தேதி வெளியாகும் என டிரெய்லரில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் டிரெய்லர் ஜூலை 30-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு வெளியிடப்பட்டது. ரவி துபே, சன்னி தியோல், அருண் கோவில், லாரா தத்தா, ரகுல் ப்ரீத் சிங், குணால் கபூர் மற்றும் சோபனா உள்ளிட்ட பலரும் படத்தில் நடித்துள்ளனர்.பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இசையமைத்துள்ளனர். இந்திய சினிமாவின் மிகப்பெரிய காட்சி அனுபவங்களில் ஒன்றாக இது இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading