நானியின் ‘தி பாரடைஸ்’ டீசர் வெளியீடு – எகிறும் எதிர்பார்ப்பு!

பான் இந்தியா அளவில் ‘தசரா’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலாவுடன் நானி மீண்டும் இணைந்துள்ள படம் ‘தி பாரடைஸ்’. நானியின் 33-வது திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது.

‘தசரா’ போலவே இந்தப் படத்திலும் நானி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான அவரது படங்களான ‘சரிபோத சனிவாரம்’ மற்றும் ‘ஹிட் 3’ ஆகியவை ரூ.100 கோடியைத் தாண்டிய வெற்றியை பெற்றதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்துள்ளது.

அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் செப்டம்பர் 24-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், படத்தின் ஒரு பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் சிறப்பு நடனம் ஆடுவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது வெளியான டீசர் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் கவனம் பெற்று வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading