1 பில்லியன் டாலர் வசூலை கடந்த ‘தி ஒடிஸி’!

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘தி ஒடிஸி’, முதல் ஒரு வாரத்திலேயே சுமார் 364 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது ரூ.3,500 கோடிக்கும் மேல் வசூலித்தது. தொடர்ந்து உலகம் முழுவதும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிவரும் இப்படம், தற்போது 1 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.9,500 கோடி) வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘தி டார்க் நைட்’, ‘தி டார்க் நைட் ரைசஸ்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, அவரது மற்றொரு திரைப்படமான ‘தி ஒடிஸி’யும் 1 பில்லியன் டாலர் வசூல் கிளப்பில் இணைந்துள்ளது. மேலும், இந்த ஆண்டில் ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’, ‘டாய் ஸ்டோரி 5’, ‘சூப்பர் மரியோ கேலக்ஸி’ உள்ளிட்ட படங்களும் 1 பில்லியன் டாலர் வசூலை கடந்துள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading