நடிகர் முத்துக்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படம்!

நடிகர் முத்துக்குமார்‌ தமிழ் சினிமாவில் ‘வேட்டை’ திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர். அதன் பிறகு ‘பேட்ட’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘மகான்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர், சமீபத்தில் வெளியான ‘தாய்க்கிழவி’ படத்தின் மூலம் மீண்டும் கவனம் பெற்றார்.

இப்போது அவர் கதையின் நாயகனாக புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் புகழும் இணைந்துள்ளார். யுனிவர்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படம் பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சென்ட்ராயன், ராமர், சரத், அஜய் ராஜ், பவேல் நவகீதன் உள்ளிட்ட பலரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் மதன் துரை இயக்குநராக அறிமுகமாகிறார்.பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்ய, எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார். டார்க் காமெடி பாணியில் உருவாகும் இந்தப் படம், முத்துக்குமார் மற்றும் புகழின் புதிய கூட்டணியாக ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading