அடுத்தடுத்து மூன்று படங்கள்… ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுக்கும் அஜித்!

‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இடையில் கார் ரேஸிங் போட்டிகளில் கவனம் செலுத்தி வந்த அஜித், மீண்டும் சினிமா பணிகளுக்குத் திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் அஜித்தை இணையவுள்ள நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கி, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு, வெங்கட் பிரபு இயக்கத்தில் இன்னொரு படம் உருவாகும் என்ற தகவலும் பரவி வருகிறது. அது ‘மங்காத்தா 2’ ஆக இருக்குமா அல்லது முற்றிலும் புதிய கதையா என்பது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி, சிறுத்தை சிவா – அஜித் கூட்டணியும் மீண்டும் இணையலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விஸ்வாசம்’ போன்ற வெற்றிப்படங்களை வழங்கிய இந்த கூட்டணி மீண்டும் இணைந்தால் அது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதிக், வெங்கட் பிரபு, சிறுத்தை சிவா என மூன்று கூட்டணிகளின் தகவல்கள் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளதால், அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகவே அனைவரும் காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply